லக்னோ:'டூப்ளிகேட் சல்மான் கான்' என்று பிரபலமாக அழைக்கப்படும் அன்சாரி, லக்னோ சிட்டி ஸ்டேஷன் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் சல்மானின் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களில் ஒன்றான 'தேரே நாம் ஹம்னே கியா ஹை' பாடலுக்கு ட்ராக்கில் படுத்திருப்பது போன்று வீடியோ பதிவிட்டு இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து அன்சாரி மீது சட்டப் பிரிவு 147, 145 மற்றும் 167 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று(செப்.19) ஆர்பிஎஃப் முன்பு அன்சாரி சரணடைந்து வீடியோ எடுத்ததற்காக மன்னிப்பு கேட்டார். இது குறித்து ரயில்வே இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் கூறுகையில், "ரயில்வே தண்டவாளங்கள் உணர்வுப்பூர்வமான இடங்கள். ரயில் தண்டவாளத்தில் அல்லது அதன் அருகே இதுபோன்ற செயல்களை மேற்கொள்வது சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற செயல்களில் இருந்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுகவில் இருந்து விலகல் ...அரசியலில் இருந்து ஓய்வு...சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை