மத்தியப்பிரதேசம்:ஜபல்பூர் மாவட்டத்தில் ரயில்வேயில் டிஆர்எம் அலுவலகத்தில் மெக்கானிக் பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிபவர் தஷ்ரத் குமார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது நண்பர்களுடன் பி6 ஏசி பெட்டியில் புது தில்லிக்குப் பயணித்துள்ளார். அப்போது பயணத்தின் போது குடிபோதையிலிருந்த தஷ்ரத் குமார் தனது படுக்கை அருகே சிறுநீர் கழித்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
குடிபோதையில் சுயநினைவு இழந்து அவர் தனது படுக்கையின் அருகே சிறுநீர் கழித்துள்ளார் என உடன் இருந்தவர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் நடந்த போது உடன் இருந்த பயணிகள் சிலர் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். 10 நாட்களுக்குப் பின்னர், இச்சம்பவம் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு இச்சம்பவம் கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க:இலங்கை போதை பொருள் கும்பல் தலைவன் கைது - 10 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பின்னணி!
இது குறித்தி ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்த போது அவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து பேச ரயில்வே அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை. இதைப் போன்ற சம்பவத்தை சாதாரண பயணி செய்திருந்தால் , ரயில்வே அதிகாரிகள் உடனடியாக குற்றவாளியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பார்கள் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ரயில்வே ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் பயணத்தின் போது தஷ்ரத் குமார் அதிக அளவில் மது அருந்தியதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தஷ்ரத் குமாருக்குக் ரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு விரைவில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் ரயில்வே அதிகாரிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஓடும் ரயிலில் குடிபோதையில் படுக்கை அருகே சிறுநீர் கழித்த ரயில்வே ஊழியரின் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
இதையும் படிங்க:சேலத்தில் பெண்ணை கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை.. தகாத உறவு காரணமா?