தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவனின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்த போதை ஆசாமி: பக்கோடா ஸ்டாலில் கொலை! - கர்நாடகா மாணவன் கொலை

அமராவதி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், பள்ளி மாணவனை இரும்புக் கம்பியால் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

East Godavari
கிழக்கு கோதாவரி

By

Published : Mar 29, 2021, 5:08 PM IST

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரியில் வீராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவர் 10ஆம் வகுப்பு படித்துவந்தார். இவர் தனது தந்தை ஷிங்கம் யேசுவுடன் பக்கோடா ஸ்டாலில் நின்றுகொண்டிருந்தபோது, அங்குக் குடிபோதையில் வந்த வீரபாபு என்பவர், ஷிங்கமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்ற, கீழே கிடந்த இரும்புக்கம்பியை எடுத்த அவர், யேசுவை தாக்கியது மட்டுமின்றி, அருகிலிருந்த சிவாவின் தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும், அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிவாவைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஷிங்கம் யேசு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வீரபாபுவை காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். பள்ளி மாணவன் கொலையால் வீராவரம் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், நிலைமையைக் கையாள காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:திருமண விழாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details