உதம்பூர்: ஜம்மு-காஷ்மீரின் செனானி நாகாவில் இன்று(அக்.23) காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி ஒன்றை சோதனை செய்தனர். சோதனையில், லாரியில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியிலிருந்து 21.5 கிலோ எடை கொண்ட 60 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குல்விந்தர் சிங்கையும் கைது செய்தனர்.