அஹமதாபாத்:குஜராத் பயங்கரவாதத் தடுப்புப்படை மற்றும் கடலோர காவல் படை ஒன்று சேர்ந்து வெளிநாட்டு கடற்பகுதிகளில் ஆப்ரேஷன் ஒன்றை நிகழ்த்தினர். அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு முந்திரா அதானி துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வழக்கு விசாரணை இன்னும் நடந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநில கடலோர காவல்படையும், பயங்கரவாதத் தடுப்புப் படையும் சேர்ந்து இந்த ஆப்ரேஷனை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இப்படியான போதைப்பொருள்கள் இதற்கு முன்பு பலமுறை இந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபி சிறையிலுள்ள நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு சிறைவாசி இந்த போதைப் பொருளை ஆர்டர் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆறு பேர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த படகு உட்பட ஜகோ துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து, இவர்களிடத்தில் இவர்கள் எங்கிருந்து இந்த போதைப்பொருள்களை எடுத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வீட்டில் மாவா தயாரித்த வடமாநிலத்தவர் கைது..!