தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேறிக்கு 14 நாள் காவல்

பெங்களூரு: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

binesh kodiyeri
binesh kodiyeri

By

Published : Nov 12, 2020, 8:55 AM IST

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கப்பரிவினர் பினீஷ் கொடியேறியை பெங்களூருவில் கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு பினீஷ் கொடியேறி பண உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கிய குற்றவாளியான அனூப்புக்கும், கேரள தங்கக் கடத்தல் கும்பலில் கைதாயிருக்கும் சிலருக்கும் தொடர்பு இருப்பதும், அனூப்பிடம் பலமுறை பினீஷ் கொடியேறி செல்போனில் பேசிய ஆதாரங்களையும் அமலாக்கப் பிரிவினர் எடுத்தனர்.

தொடர்ந்து 12 நாள் மத்திய அமலாக்கப் பிரிவு காவலில் விடுக்கப்பட்டார். விசாரணையில், பினீஷ்க்கு கேரளா உள்பட் பல்வேறு இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தது தெரியவந்தது. அவரது வீட்டை பரிசோதனை செய்ததில், முகமது அனூப்பின் டெபிட் கார்ட் சிக்கியதுடன் மேலும் பல ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்றுடன் காவல் முடிவடைந்த நிலையில், அமலாக்கப் பிரிவினர் பினீஷை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து 14 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

பினீஷ் பிணை கோரிய வழக்கு வருகின்ற 18ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாதியில் நின்ற மின்சாரம்; செல்போன் ஒளியில் பிரசவம் பார்த்த மருத்துவர்!

ABOUT THE AUTHOR

...view details