டெல்லி: உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers' ஆவணப் பட நாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன் -பெள்ளி தம்பதியினரை நேரில் அழைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி, குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் குடியரசுத்தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியினர் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரிக்கும் பணியை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கும், கதாநாயகர்களான பொம்மன் - பெள்ளி தம்பதியினருக்கும் உலக அளவில் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க:"அதிகாரத்திலோ.. பிரதமர் பதவியிலோ காங்கிரசுக்கு ஆசையில்லை" - மல்லிகார்ஜூன கார்கே!