டெல்லி:உச்ச நீதிமன்றத்தில் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். லலித், 1957ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி பிறந்தார். 1983ஆம் ஆண்டு வழக்கறிஞரானார். முதன் முதலாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாதாட தொடங்கினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்... அவரது முக்கிய தீர்ப்புகள் தெரியுமா..? - U U Lalit
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் குறித்து காணலாம்.
அதன்பின் 1986ஆம் ஆண்டில் டெல்லிக்கு மாறினார். 2004ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவரது சட்டப்புலமை காரணமாக 2014ஆம் ஆண்டில் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 27) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இருப்பினும் யு.யு.லலித், வரும் நவம்பர் 8ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் பின்வருமாறு.
- கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3-2 என்ற பெரும்பான்மையுடன் உடனடியாக 'முத்தலாக்' மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று தீர்ப்பளித்தார்.
- இவர் தலைமையிலான அமர்வு, கேரளாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாக உரிமையை திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு வழங்கி உத்தரவிட்டது.
- இவரது தலைமையில் குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தொடுவது அல்லது பாலியல் நோக்கத்துடன் உடல் ரீதியில் தொடர்பு கொள்ளும் எந்தச் செயலும் பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:ஓய்வுபெற்றார் என்.வி. ரமணா... பின்னணியும் வரலாற்றுத்தீர்ப்புகளும்