தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய கடற்பகுதியில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதலா? - கடலோர காவல்படை அளித்த விளக்கம்!

Merchant ship fire: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த வணிக கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, இந்திய கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 11:17 AM IST

மும்பை:கடந்த டிசம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வணிக கப்பல் ஒன்று இந்தியாவை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் நாளை (டிச.25) புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வர இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு (டிச.23) இந்திய கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் எந்தவித உயிர்சேதமும் இல்லை என மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல்படை மீட்பு ஒத்துழைப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக இந்திய கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் நிரஞ்சன் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எம்வி செம் புளூட்டோ என்ற வணிக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக மும்பையில் உள்ள இந்திய கடலோர காவல்படை மீட்பு ஒத்துழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த வணிக கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் 1 வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் என 21 பேர் இருக்கின்றனர்.

கிடைத்த தகவலின்படி, இது ட்ரோன் தாக்குதலாகவோ அல்லது வான்வழித் தாக்குதலாக இருக்க வேண்டும். இது குறித்த தகவல் அறிந்ததும், வணிக கப்பலின் முகவர் உடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், காவல்படை, செம் புளூட்டோ வணிக கப்பலை சரியாக கொண்டு வருவதற்கான வேலைகளில் இயங்கி வருகிறது.

அது மட்டுமல்லாமல், கடலோர ரோந்து கப்பல் விக்ரம் மற்றும் கடலோர காவல் ட்ரோனியர் கப்பல்களையும், கண்காணிப்பு வானூர்திகளையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, விபத்துக்குள்ளான வணிக கப்பலை மும்பைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேநேரம், வணிக கப்பலில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர காவல்படையின் கப்பல்கள் அதற்குண்டான வழியைக் காட்ட உதவுகின்றன. இந்த பணியானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி! வெளியான துப்பாக்கிச் சூட்டின் காரணம்?

ABOUT THE AUTHOR

...view details