பெங்களூரு:காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், அக்கட்சியின் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரைத்தில் (தேச ஒற்றுமை நடைப்பயணம்) ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நடந்துவருகிறது. அந்த வகையில் நேற்று (அக். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மைசூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
இதனிடையே மழை பெய்தது. இருப்பினும் உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார். அப்போது அவர், இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை தொடரும், ஒருபோதும் நிறுத்தப்படாது. புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ இந்த நடைப்பயணத்தை நிறுத்த முடியாது. பாஜக-ஆர்எஸ்எஸ்ஸால் பரப்பிவரும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நடைப்பயணத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.