மயூர்பஞ்ச் (ஒடிசா): நாட்டின் 15 ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18 அன்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் நாட்டின் 15 வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு வருகிற ஜூலை 25 அன்று பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து திரௌபதி முர்முவின் உறவினர் சாக்ரோமி துடு கூறுகையில், “பட்டியலிடப்பட்ட பழங்குடி (எஸ்டி) சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்பதால், சந்தாலி (Santhali) சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய பெருமையாகும். அவரது வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது" என தெரிவித்தார்.