முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னதாக கடும் காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று (ஏப்.19) அவருக்கு மேற்கொள்ள பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும் அவர் விரைவில் நலம்பெற வேண்டி செய்தி வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மன்மோகன் சிங்கின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினரிடம் தான் பேசியதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், மன்மோகன் சிங்குக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மார்ச் 4ஆம் தேதி, முதல் தவணை தடுப்பூசியையும், ஏப்ரல் 3ஆம் தேதி இரண்டாவது தவணையையும் மன்மோகன் சிங் செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:2ஆவது முறையாக பொதுமக்கள் இன்றி நடைபெறும் திருச்சூர் பூரம் விழா!