தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2022, 3:11 PM IST

ETV Bharat / bharat

விரைவில் மூக்கின் வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து

மூக்கின் வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருத்தின் 3ஆம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்தார்.

Bharat Biotech's COVID-19 nasal vaccine phase III trials completed
Bharat Biotech's COVID-19 nasal vaccine phase III trials completed

டெல்லி: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கடந்த வார தொடக்கத்தில் 6 ஆயிரமாக கரோனா பாதிப்பு இருந்தது. இன்று (ஜூன் 19), 12,899 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கரோனா தொற்று அதிகரித்துவரும் மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே மூக்கின் வழியே செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருத்தின் 3ஆம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், அனுமதிக்கோரி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்ப உள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "மூக்கின் வழியே செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டன. அடுத்த மாதம், மருந்தின் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம். அனுமதி கிடைத்த உடன் மனிதர்களுக்கு செலுத்தப்படும், சந்தைப்படுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க:'கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்கள் விவரத்தை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details