தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒரு தலை காதல் கொடூரம்' - தாய், மகள் வெட்டிப் படுகொலை - பஹ் காவல் துறை

லக்னோ:ஆக்ராவில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தாய், மகள் இருவரையும் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Agra
ஆக்ரா

By

Published : Mar 8, 2021, 5:41 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பஹ் காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும், மகளும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 வயதான ஷரதா தேவி, தனது மகள் காமினியுடன் (19) வீட்டில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியா நபர் ஒருவர், தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த ஷரதா தேவியின் மருமகளையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த மருமகளை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஷரதா தேவியும், காமினியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் காவல் துறை தலைவர் சதீஷ் கனேஷ், ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின்படி, கோவிந்த என்பவர் யாமினியை ஒருதலைபட்சமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், யாமினி காதலுக்கு ஓகே சொல்லாத ஆத்திரத்தில், அவரது வீட்டிற்குச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று காவலர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வீடு புகுந்து திருடிய இளைஞரைத் துரத்திப் பிடித்த காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details