லக்னோ: உத்தரப்பிரதேசம், பாராபங்கி மாவட்டத்திற்கு அருகே பூர்வாஞ்சல் அதிவிரைவுச்சாலையில் இரண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மோதி இன்று (ஜூலை 25) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், எட்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், 16 பேர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாராபங்கி கூடுதல் காவல் கண்காணிப்பாளரான மனோஜ் பாண்டே கூறியதாவது, "நரேந்திரபூர் மதராஹா கிராமத்திற்கு அருகே பீஹாரின் சித்தமர்ஹியில் இருந்து வந்த பேருந்து, டெல்லியைச் சேர்ந்த பேருந்தின் மீது மோதியுள்ளது" என்றார்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும்; காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும், படுகாயமடைந்த சிலர் லக்னோவுக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவது குறித்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:Video: காந்தி நினைவிடத்தில் திரெளபதி முர்மு மரியாதை