தமிழ்நாடு

tamil nadu

தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் நம்பிக்கை அவசியம்: பிரதமர் மோடி

By

Published : Mar 3, 2021, 1:18 PM IST

தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் தன்னம்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

PM Modi
PM Modi

மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “தேசிய கல்விக் கொள்கையில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியாளர்கள் அனைவரும் உலகின் சிறந்த கருத்துக்களை இந்திய மொழிகளில் கொண்டுவந்து சேர்க்க வேண்டியது கடமை.

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது சாத்தியமே. இந்தப் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு அடுத்தபடியான முக்கியத்துவத்தை கல்விக்கு வழங்கியுள்ளோம். வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் பயிற்சி ஆகிவற்றுக்கு இந்தப் பட்ஜெட் அதிக கவனம் கொடுத்துள்ளது.

விண்வெளி, அணுசக்தி, ஆராய்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இளைஞர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் தன்னம்பிக்கை முக்கியமாகும்” என்றார்.

இதையும் படிங்க:ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.77,815 கோடி ஈட்டிய அரசு, அதிக அலைக்கற்றையை வாங்கிய ஜியோ

ABOUT THE AUTHOR

...view details