தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

76 ஆவது சுதந்திர தினத்திற்கு டூடல் வெளியிட்ட கூகுள் - கைவினை கலைஞர் நித்தி

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடல் வெளியிட்டுள்ளது.

Etv Bharat75 ஆவது சுதந்திர தினத்திற்கு டூடல் வெளியிட்ட கூகுள்
Etv Bharat75 ஆவது சுதந்திர தினத்திற்கு டூடல் வெளியிட்ட கூகுள்

By

Published : Aug 15, 2022, 10:30 AM IST

Updated : Aug 15, 2022, 2:21 PM IST

இரு நூறு ஆண்டுகள் ஆங்கிலேயரின் பிடியில் இருந்த பல இன்னல்கள் மற்றும் போராட்டங்களை கடந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்திற்காக சிறப்பு டூடல் ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட டூடுல், கேரளாவைச் சேர்ந்த கைவினை கலைஞரான நித்தி பல பட்டங்களை செய்வது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கிறது.

சுதந்திர தினம் 2022 டூடலில் வரையப்பட்டுள்ள “காத்தாடிகளைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தை சித்தரிக்கிறது - பிரகாசமான அழகான காத்தாடிகளை உருவாக்கும் கைவினை கலை முதல் சமூகம் ஒன்றுசேரும் மகிழ்ச்சியான அனுபவம் வரை நீள்கிறது. மேலும் உயரமாக பறக்கும் காத்தாடிகளால் பிரகாசமான பரந்த வானத்தின் பரந்த விரிவாக்கம், நாம் அடைந்த பெரிய உயரங்களின் வண்ணமயமான அடையாளமாக திகழ்கிறது.

இந்தியாவின் கலாச்சாரம் சுதந்திர போராட்ட காலனித்துவ தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக நிலை நிறுத்தப்பட்டது. மேலும் பல போரட்டங்களில் இந்த அடையாளத்திற்காக இரத்தம் பலர் சிந்தினர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகவும், இந்தியாவின் சுதந்திர செய்தியை பரப்பவும் முழக்கங்களுடன் பட்டம் பறக்கவிட்டு வந்தனர். அப்போது முதல் இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடும் ஒரு வழக்கமான வழியாக பட்டம் பறக்கவிடுவது கடைபிடிக்கப்படுகிறது.

Last Updated : Aug 15, 2022, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details