பாட்னா (பிகார்): பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பூர்னியாவில் தனது ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தபோது 2020 பிகார் தேர்தல் தனது கடைசி தேர்தல் என்று அறிவித்தார்.
மேலும், இன்று தேர்தலின் கடைசி நாள் என்றும், மறுநாள் தேர்தல் என்றும் அறிந்து கொள்ளுங்கள். இது எனது கடைசி தேர்தல். முடிவு நன்றாக இருந்தால், அனைத்தும் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
இது குறித்து ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தனது ட்விட்டர் பதிவில், “இந்த முறை, அவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான கணக்கை வழங்கவில்லை. ஏற்கனவே அடுத்த முறை நான் கணக்கில் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். நாளை மீண்டும் உங்கள் ஆதரவை கேட்க வராதவர்களுக்காக உங்கள் உரிமைகளை வீணாக்காதீர்கள். அவர் இல்லையென்றால் ஜேடியுவும் இருக்காது' என்று சிராக் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், “ஜேடியு வேட்பாளருக்கு நீங்கள் வழங்கும் ஒரு வாக்கு உங்கள் குழந்தைகளை நாளை மாநிலத்திலிருந்து தப்பி ஓட கட்டாயப்படுத்தும். இனி பிகார் மோசமான நிலைக்கு செல்ல வேண்டாம். அரசாங்கத்திற்கான அனைத்து எல்.ஜே.பி மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிகார் தேர்தல்: பரப்புரையின்போது நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீச்சு