புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ புதுச்சேரியில் எங்கள் கட்சியின் பரப்புரை சிறந்த முறையில் உள்ளது. பாஜகவினர் பணபலத்தைக் கொண்டு வாக்காளர்களையும், வேட்பாளர்களையும் வாங்கி வருகின்றனர்.
தற்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பல தலைவர்கள் புதுச்சேரி வருகின்றனர். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் எந்த தலைவரும் பரப்புரைக்கு இவர்களைப் போல் வரவில்லை.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்ப வேண்டாம், அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மெஜாரிட்டியில் வந்தாலும் அக்கட்சி தலைவரை ஆட்சி செய்ய பாஜகவினர் விட மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க:தொடங்கியது 'கோவோவேக்ஸ்' தடுப்பூசியின் ஆய்வு!