லக்னோ:உத்தரபிரசேதம் மாநில அரசு மின்வெட்டுக்கு காரணம் கூறி கொண்டிருப்பதை விமர்சித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, எரிசக்திதுறை அமைச்சர் ஏ.கே ஷர்மா, "உத்தரபிரசேதத்தில் உள்ள சில மின் உற்பத்தி நிலையங்கள் தொழில்நுட்ப காரணங்களால் பல வாரங்களாக மூடப்பட்டுள்ளன. ஹர்துவாகஞ்ச்- 605 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம், மெஜா- 660 மெகாவாட், பாரா- 660 மெகாவாட் ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதில், ஹர்துவாகஞ்ச் நிலையம் பருவகால புயலால் சேதமடைந்துள்ளது. அவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்து, மின்விநியோகம் தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்திருந்தார்.