உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "உங்களை தடுத்து நிறுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள்" என தெரிவித்துள்ளார். வரலாற்றையும் எதிர்காலத்தையும் வல்லமைமிக்கதாய் படைக்க பெண்கள் திறம் படைத்தவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
'உங்களை தடுத்து நிறுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள்' - ராகுல் காந்தி - சர்வதேச பெண்கள் தினம்
டெல்லி: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, "உங்களை தடுத்து நிறுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள்" என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
பெண்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "சர்வதேச பெண்கள் தினமான இன்று, வெல்ல முடியாத பெண்சக்திக்கு தலைவணங்குகிறேன். பெண்களின் சாதனைகளால் நாடு பெருமை கொள்கிறது. பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேறத்திற்காக உழைக்க கிடைத்த வாய்ப்பை பெற்றதில் அரசு பெருமிதம் கொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.