ஆனந்த்பூர்(ஆந்திர பிரதேசம்):ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஜனார்த்தன வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ரத்தோச்சவம் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒருபகுதியாக கழுதை ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்த ஓட்டப்பந்தயத்தில் கழுதையின் உரிமையாளர்கள் கழுதை மேலே ஏறி விரட்டி சென்றனர்.
கரோனா ஊரடங்கால் தடைபட்ட கழுதை சவாரி இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் தார் சாலையில் 18 கிமீ தூரம் ஓடி முதலாவதாக இலக்கை அடையும் கழுதையே வெற்றி பெற்றதாகும். இந்தப் பந்தயத்திற்கு சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் பலர் பங்கேற்பதற்காக வந்திருந்தனர். பந்தயத்தில் வென்ற வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.