தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி கோயில் மூத்தக் குருக்கள் டாலர் சேஷாத்ரி மறைவு! - டாலர் சேஷாத்ரி மறைவு

திருப்பதி கோயில் மூத்தக் குருக்கள் டாலர் சேஷாத்ரி மறைந்தார். அவருக்கு வயது 75.

Dollar Seshadri
Dollar Seshadri

By

Published : Nov 29, 2021, 3:05 PM IST

திருப்பதி : திருப்பதி வெங்கடாசலப்பதி கோயில் மூத்தக் குருக்கள் பி. சேஷாத்ரி என்ற டாலர் சேஷாத்ரி திங்கள்கிழமை (நவ.29) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 75.

கார்த்திகை தீப திருவிழா தொடர்பான விழாவில் கலந்துகொள்ள டாலர் சேஷாத்ரி விசாகப்பட்டினத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.28) சென்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. மூத்தக் குருக்களான டாலர் சேஷாத்ரி 1978ஆம் ஆண்டு முதல் திருப்பதி கோயிலில் பூஜை செய்துவந்தார்.

2007இல் ஒய்வுக்கு பின்னர் திருப்பதி தேவஸ்தான சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். டாலர் சேஷாத்ரி மறைவுக்கு திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : வைகுண்ட ஏகாதசி: ஆன்லைன் முன்பதிவை தொடங்கிய திருப்பதி

ABOUT THE AUTHOR

...view details