தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் தூக்கி சென்ற கொடூரம் - அரசு மருத்துவமனை

ஹரியானாவில் மருத்துவமனையில் இருந்து பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை தெருநாய் தூக்கி சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் இழுத்து சென்ற சம்பவம்
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் இழுத்து சென்ற சம்பவம்

By

Published : Jun 29, 2022, 6:53 AM IST

ஹரியானா: பானிபட் தனியார் மருத்துவமனை வார்டில் குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது குழந்தையை நாய் எடுத்துச் சென்றுள்ளது.

மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள பொது வார்டில் தாய் ஷப்னம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் (ஜூன் 27) இரவு, அவர் தனது கணவர், மாமியாருடன் அறையில் இருந்துள்ளார். ஷப்னம் தவிர அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அறையின் தரையில் தூங்கிக் கொண்டிருந்தனர், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பிறகு, அவர்களுடன் தரையில் படுக்க வைத்தனர்.

பின்னர் நள்ளிரவில் குடும்ப உறுப்பினர் ஒருவர் கண்விழித்து பார்த்தபோது அருகில் இருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தையைத் மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியே பார்த்த அவர்கள், குழந்தையை நாய் ஒன்று வாயில் கவ்வி தூக்கி செல்வதை பார்த்த அவர்கள், எப்படியோ குழந்தையை நாயிடம் இருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆத்திரமடைந்த குடும்பத்தினர், எப்படி தெருநாய்கள் கட்டிடத்திற்குள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன என்று மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். பின்னர் மருத்துவமனையின் சிசிடிவியை ஆராய்ந்த போது அதிகாலை 2:07 மணிக்கு குழந்தையை நாய் ஒன்று மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்துச்செல்வது தெரியவந்தது.

இதையும் படிங்க:குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் 'துங்கா' நாய்!

ABOUT THE AUTHOR

...view details