கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடிமலதுராவில் கிறித்துராஜ் என்பவரது வளர்ப்பு நாயை அதே பகுதியில் உள்ள சிறுவன் உள்பட மூன்று பேர் கட்டிவைத்து சித்ரவதை செய்து கட்டையால் அடித்துக் கொன்றனர்.
நாயை கட்டிவைத்து கொலை: மூவர் கைது - நாயை கொலை செய்தவர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் நாயை கட்டிவைத்து கொடூரமாக கொலைசெய்த வழக்கில் சிறுவன் உள்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
dog killed case accused
இந்தச் சம்பவத்தின் காணொலி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே, கிறித்துராஜ் அடிமலதுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அத்துடன் கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த நிலையில், இது தொடர்பாக சிறுவன் உள்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.