தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

World No Tobacco Day 2021: புகைப்பழக்கம் கரோனா பாதிப்பை அதிகரிக்குமா? - புகையிலை ஒழிப்பு

கரோனா தொற்றின் பாதிப்பும், புகையிலைப் பயன்பாட்டின் பாதிப்பும் நேரடி தொடர்புகொண்டவை. இரண்டுமே சுவாசக் கோளாறுகளை தீவிரப்படுத்தக் கூடியவை. இந்த நேரத்தில் புகைப்பிடித்தலால் கரோனா பாதிப்பின் வீரியம் அதிகரிக்குமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த விளக்கக்கட்டுரையை இங்கு காணலாம்.

does-smoking-increase-the-risk-of-severe-covid-19
does-smoking-increase-the-risk-of-severe-covid-19

By

Published : May 31, 2021, 6:07 PM IST

புகையிலைப் பயன்பாடு, 50 விழுக்காடு நுகர்வோருக்கு மரணத்தை அளிக்கிறது. மீதமுள்ளவர்கள் புற்றுநோய்கள், இதய நோய்கள், சுவாசப் பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னைகள், மலட்டுத்தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். தற்போதைய சூழலில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

ஏனென்றால், கரோனா தொற்றின் பாதிப்பும், புகையிலைப் பயன்பாட்டின் பாதிப்பும் நேரடி தொடர்புகொண்டுள்ளன. இரண்டுமே சுவாசக் கோளாறுகளை தீவிரப்படுத்தக் கூடியவை. நீங்கள் புகையிலைப் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், கட்டாயம் அதிலிருந்து மீள முயற்சிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

உலக புகையிலை ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் புகையிலை பழக்கம் கொண்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். புகைப்பழக்கத்தை விட்டுவிடும்போது ஏற்படும் விரக்தியை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதே முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டும்.

புகையிலை பாதிப்புகள்

புகைப்பிடித்தல் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக, புகைப்பிடித்தலால் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. அத்துடன் காசநோய், சில கண் நோய்கள், முடக்கு வாதம், நோய் எதிர்ப்பு மண்டல சிக்கல் உள்ளிட்டவையும் அடங்கும். இந்நோய்கள் பொதுவானவை.

ஆனால், புகைப்பிடித்தல் பழக்கம் பெண்கள் இடையே எக்டோபிக் கர்ப்பத்தை (Ectopic pregnancy) ஏற்படுத்தும். 'எக்டோபிக் கர்ப்பம்' என்பது கருமுட்டையானது கருப்பையை அடையாமல் பிற பகுதிகளில் முடங்கிவிடுவதாகும். புகைப்பழக்கம் கொண்ட பெண்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் எளிதில் நிகழ்ந்துவிடலாம். இதற்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கருவுறுதல் மிகக்கடினமாகிவிடும்.

கரோனா-புகையிலை

நீங்கள் புகையிலை பழக்கம் உடையவராக இருந்தால், அதை நசுக்கி தூக்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, புகைப்பிடித்தலின் பொதுவான தீங்கு நுரையீரலின் சீரான செயல்பாட்டையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைப்பதே ஆகும். இதனால், புகைப்பிடிப்பவரின் உடல் ஒரு நோயை எதிர்த்துப் போராட மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறது.

குறிப்பிட்டுச் சொன்னால், புகைப்பழக்கத்தால் வரக்கூடிய வேறு எந்த வகையான புற்றுநோய்களையும் விட அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இந்த கரோனா சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. புகைப்பழக்கம் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு நிமோனியா(Pneumonia) நுரையீரல் அழற்சி ஏற்படுகிறது.

ஓர் சீரான மனிதனின் வாய் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகச் செல்லும் காற்று நுரையீரலின் காற்று அறைகளை அடைய வேண்டும். இது ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக்கொள்ள உதவும். ஆனால், நிமோனியா ஏற்பட்டால் நுரையீரலின் காற்று அறைகளிலும், மூச்சுக் குழாய்களிலும் திரவம் கோர்த்துக் கொள்கிறது. மூச்சுவிட மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த திரவம் சளி, அல்லது நிமோனியாவால் ஏற்படும் சீழாகும். இந்தப் பாதிப்பு உள்ள ஒருவர் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.


தற்போது கரோனா வீரியத்தின் உச்ச நிலையும் இதுதான். இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3500ஆக உள்ளது. இதில் சராசரியாக 178க்கும் அதிகமானோர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருந்துவமனைகளிலோ, அல்லது ஆம்புலன்ஸ்களில் காத்திருந்தோ உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் மூச்சுக் குழலில் ஏற்படும் தடையே. இத்தகைய நேரத்தில் புகைப்பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபடுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். ஒருவேளை நீங்கள் புகைப்பழக்கம் கொண்டவர்களின் நண்பர்களாக, உறவினர்களாக, காதலராகவோ இருந்தால் உங்கள் அன்புக்குரியவர்களை மாற்றுங்கள்.

இதையும் படிங்க:உலக புகையிலை எதிர்ப்பு நாள் - விழிப்புணர்வு ஏற்படுத்திய மணல் சிற்பக்கலைஞர்!

ABOUT THE AUTHOR

...view details