மத்தியப்பிரதேசம்: சிவ்புரி கரைராவில் வசித்து வருபவர் லல்லன் (37). இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 8) அன்று அப்பகுதியில் உள்ள ஜான்சி மருத்துவனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வல்லன் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு அவதிப்பட்டார். உடனடியாக அவரைச் சோதனை செய்த போது, வல்லனுக்கு தவறுதலாக காற்றுடன் ஊசி செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, சக மருத்துவர்கள் இஎன்டி துறைத் தலைவர் மருத்துவர் ஜிதேந்திர யாதவுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, டாக்டர் ஜிதேந்திர யாதவ் மற்றும் அவரது குழுவினர் ஆபத்தில் உள்ள நோயாளி வல்லனுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் தாமதம் ஏற்பட்ட போதிலும்நோயாளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர் ஜிதேந்திர யாதவ் கூறுகையில் ’’ நோயாளி வல்லனுக்கு தவறாக காற்றுடன் ஊசி செலுத்தப்பட்டது. உடனே, மருத்துவ குழு நோயாளியை காப்பாற்றும் பணியில் தீவிராம ஈடுப்பட்டோம். சற்று தாமதமானாலும் இவரது உயிர் பறிபோயிருக்கும். மருத்துவர்கள் அனைவரும் சேர்ந்து நோயாளியின் உயிரைக் காப்பாற்றினர். இதில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்று கூறினார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்