டெல்லி: பொதுவாக சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் புகையிலை, குட்கா, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனையிட்டு கண்டறிவது வழக்கம். இதோபோல, ஜன.5ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கைதிகளிடம் சிறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிறையின் எண் ஒன்றில் இருந்த கைதி தான் வைத்திருந்த சிறிய ரக செல்போனை அச்சத்தில் அலுவலர்கள் முன்னிலையில் விழுங்கிவிட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், அவரை சிறை மருத்துமனைக்கு கொண்டுசென்றனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.