திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை, புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்து, அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேசினர்.
அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 13 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுவதென ஒப்பந்தம் கையெழுத்தானது. எஞ்சியுள்ள இரண்டு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.