தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலவசங்களால் முன்னேறியுள்ளோம்... உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம் - உச்சநீதிமன்ற

உச்ச நீதிமன்றத்தில் இலவச திட்டங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வாதிட்ட திமுக, தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட இலவசங்களால் நாடு முன்னேறியுள்ளதாகப் பல உதாரணங்களை முன் வைத்துள்ளது.

இலவசங்களால் முன்னேறியுள்ளோம் - உச்சநீதிமன்றத்தில் திமுக வாதம்
இலவசங்களால் முன்னேறியுள்ளோம் - உச்சநீதிமன்றத்தில் திமுக வாதம்

By

Published : Aug 22, 2022, 3:10 PM IST

டெல்லி: இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், இலவசத்திட்டங்கள் மூலம் மட்டுமே இது சாத்தியமானது எனவும் திமுக உச்ச நீதிமன்றத்தில் இலவசப்பொருட்களுக்கு எதிரான வழக்கில் வாதிட்டுள்ளது. மேலும் பல உதாரணங்களையும் எடுத்துக் காட்டியுள்ளது.

முன்னதாக இந்தியா முழுவதும் இலவசத்திட்டங்கள் குறித்து சமீபகாலத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் பல அமைப்புகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தன. இலவசப்பொருட்கள் வழங்குவதால் மக்களின் வரிப்பணம் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கிற்கு எதிராக மனு தாக்கல் செய்த திமுக இந்த வழக்கில் வாதிட்டது. இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதன் மனுதாரர் ஆக இணைக்கப்பட்டார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ‘ திராவிட இயக்கக் கொள்கையின் அடிப்படையானது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரின் சமூக-பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்வது ஆகும்’ எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இலவசங்கள் வழங்குவதால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தடைபடவில்லை என்பதற்குப் பல உதாரணங்களை தெரிவித்துள்ளார். அதன் மூலம் மக்களுக்கு இலவசத் திட்டங்களை வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பின் தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்ய முடியும் என திமுக தெரிவித்தது. மேலும் இந்த இலவச திட்டங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த அஸ்வினி அரசியல் நோக்கத்துடன் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியது.

மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை இலவசங்கள் என வகைப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கொண்டு வந்தால் மக்களுக்கு அரசு வழங்கும் கல்வி, மருத்துவம் என அனைத்துமே இலவசங்கள் கீழே வந்து விடும் என திமுக கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் அனைத்தும் இலவசத் திட்டங்கள் அளித்ததால் மட்டுமே சாத்தியமானது. இந்தியா முதல் மூன்று வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருப்பதும் இதனாலேயே சாத்தியமானது. மேலும் நாட்டில் உள்ள சிறந்த 100 கல்வி மையங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளதற்கும் இதுவே காரணமாகும்.

‘தமிழ்நாட்டிற்கு வாங்க’:இலவசங்களுக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்துள்ள அஸ்வினி உபாத்யா நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ்நாடு இலவசங்களால் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும் பல ஆயிரம் ஆண்டுகளாக சாதி மற்றும் பொருளாதாரம் ஆகியவைகளால் பின் தங்கிய மக்களை முன்னேற்றும் இந்த திட்டங்களை இலவசங்கள் எனப் பொதுவாக வகைப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தது.

இலவசத் திட்டங்கள் மூலம் இப்படி பல்வேறு முன்னேற்றம் நடைபெறுகிறது. எனவே, இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது

ABOUT THE AUTHOR

...view details