தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டாலின் உத்தரவை ஏற்று கேரள முதலமைச்சரைச் சந்தித்த திமுக எம்பிக்கள்! - டிகேஎஸ் இளங்கோவன்

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்த நீதியரசர் ஏ.கே. ராஜன் அளித்த பரிந்துரையையும் இணைத்து கேரள முதலமைச்சரிடம் திமுக மக்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று வழங்கினார்.

DMK MP TKS elangovan meets kerala cm regarding neet exam
ஸ்டாலின் உத்தரவை ஏற்று கேரள முதலமைச்சரை சந்தித்த திமுக எம்பிக்கள்!

By

Published : Oct 6, 2021, 2:28 PM IST

திருவனந்தபுரம்:நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அனுப்பி, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலையை ஆதரிக்குமாறும், கல்வியில் மாநிலத்தின் முதன்மையை மீட்டெடுக்க முன்வருமாறும் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விளக்கி, நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்கி அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் உத்தரவையேற்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் இன்று (அக்டோபர் 6) காலை திருவனந்தபுரத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் கடிதத்தையும், நீதியரசர் ஏ.கே. ராஜனின் பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார்.

அப்போது, தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம். குமார், கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வு: 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details