போபால்: இந்தூரில் மகேஸ்வர் பகுதியில் 11 வயது சிறுமி 35 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், அந்த சிறுமி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பம் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்த நிலையில், தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் நேரில் சென்று,பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.