டெல்லி: நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 9) மக்களவையில் கதிர் ஆனந்த் உரையாற்றியுள்ளார்.
அதில் அவர், "இந்த பட்ஜெட்டில் எந்த நலத்திட்டமும் இல்லை. வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது தென்னிந்தியாவுக்கு வஞ்சனை மட்டுமே செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, அவர்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டது மூலம், அதனைச் சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகள் எல்லாமே காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் ஏதும் செயல்படுத்தப்படுவதில்லை.