தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட் தேர்வு விலக்கு: ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி! - திமுக மக்களவை உறுப்பினர்

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.

dmk mp kanimozhi, odisha cm naveen patnaik, ban neet campaign, கனிமொழி, நவீன் பட்நாயக், ஒடிசா முதலமைச்சர், திமுக மக்களவை உறுப்பினர், நீட் தேர்வு
ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி

By

Published : Oct 13, 2021, 4:03 PM IST

Updated : Oct 13, 2021, 4:22 PM IST

புவனேஷ்வர் (ஒடிசா): திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க்கை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஆகையால், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021 சட்ட முன்வடிவு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் நகல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பை பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு நேரில் சென்று வழங்கி தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் ஒருபகுதியாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், நேற்று (அக்.12) ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை நேரில் சந்தித்து கடித நகலை வழங்கி ஆதரவு கோரினார்.

ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி

இந்நிலையில் தற்போது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பான கடிதத்தை அவரிடம் வழங்கினார். தொடர்ந்து நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு ஏழை மாணவர்கள் படும் துன்பத்தை விவரித்தார். இந்த சந்திப்பின் போது நவீன்பட்நாயக்கின் தனிச்செயலாளரான தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் உடனிருந்தார்.

சந்திப்பு நிறைவடைந்தவுடன் கனிமொழியை கார் வரை சென்று ஒடிசா முதலமைச்சர் வழி அனுப்பி வைத்தார்.

தேசிய தேர்வுகளுக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு நவீன் பட்நாயக் அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்

Last Updated : Oct 13, 2021, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details