தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் கனிமொழி - மம்தா பானர்ஜி சந்திப்பு

மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடியதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு குறித்து கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

kanimozhi mp
kanimozhi mp

By

Published : Jul 29, 2021, 8:33 PM IST

டெல்லி: தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று(ஜூலை 29) டெல்லியில் மம்தா பானர்ஜியைச் நேரில் சந்தித்து பேசினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஐந்து நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி பயணத்தின் தொடக்கமாக அவர் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

பின்னர் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரைச் சந்தித்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை நேற்று(ஜூலை 28) சந்தித்தார்.

சோனியா காந்தியுடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பெகாசஸ் விவகாரம், 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 29) தி.மு.க. எம்.பி. கனிமொழி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் டெல்லி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு குறித்து கனிமொழி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில்,' மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது.

சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே:மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்கப்படும் - கனிமொழி எம்.பி., பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details