தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடித்திடுக’ - முதலமைச்சரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு - Dml mla petition to puducherry cm rangasamy

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தெற்கு அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில், திமுக எம்எல்ஏ சம்பத், நிர்வாகிகள் இணைந்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.

ரங்கசாமி
ரங்கசாமி

By

Published : Aug 12, 2021, 8:18 AM IST

திமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் அளித்த மனுவில், "விழுப்புரத்தில் இருந்து கடலூர் மார்க்கமாகச் செல்லும் கனரக வாகனங்கள், புதுச்சேரி நகரப் பகுதிக்கு வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் இருக்க, அரும்பார்த்தபுரத்தில் இருந்து முதலியார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகில் 100 அடி சாலையை இணைக்க புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு பெருமளவில் தொகை வழங்கப்பட்டும் பாழாகி வருகிறது.

அதேசமயம் அந்தப் புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகள் தவிர்க்கப்படும். நிலம் கையகப்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு இல்லாமல் இருக்கும் இடத்தில் சமூக விரோதச் செயல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

முதலமைச்சரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு

தேங்கி நிற்கும் மழைநீர், ஏரி நீர் வெளியேற பாலங்கள் கட்டப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு நிலத்தின் மட்டத்தைக் கணக்கிட்டு மழைநீர் வெளியேறுவதற்கு பாலங்கள் துரிதமாக அமைக்கப்பட வேண்டும்.

புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைவதற்கும், புறவழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், புறவழிச்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தும் வகையிலும், புறவழிச்சாலை பணிகளை உடனடியாக, போர்க்கால அடிப்படையில் தொடங்கி முடிக்க வேண்டும்" எனவும் கோரியுள்ளனர்.

இதையும் படிங்க:ரூ. 10 லட்சம் மோசடி புகார் - வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details