தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவையில் தொடரும் ராஜினாமா; திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவி துறப்பு - DMK MLA Venakatesan resigned

திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன்
திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன்

By

Published : Feb 21, 2021, 4:00 PM IST

Updated : Feb 21, 2021, 5:01 PM IST

15:56 February 21

திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசனின் ராஜினாமா கடிதம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் தற்போது ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 14ஆக உள்ளது.

முன்னதாக, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் இன்று ராஜினாமா செய்தார். இதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தநிலையில், தற்போது கூட்டணிக் கட்சியான திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் ராஜினாமா செய்துள்ளது ஆளும் நாராயணசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது. 

இன்று இரண்டு உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தையும் பெற்றுக்கொண்ட சபாநாயகர் சிவகொழுந்து, அதை சட்டப்பேரவை செயலரிடம் தந்துள்ளதாகவும், சட்டத்திற்கு உட்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆளுநர் மாளிகைக்கு 'குட் பை' சொன்னார் கிரண்பேடி!

Last Updated : Feb 21, 2021, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details