பிரபல எழுத்தாளர் கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பால் நேற்றிரவு (மே.17) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். எழுத்தாளருக்கு லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றர். எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கி.ரா உடலுக்கு திமுக சார்பில் மரியாதை!
புதுச்சேரியில் மரணமடைந்த எழுத்தாளர் கி. ரா உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புதுச்சேரி திமுக சட்டப்பேரவை குழு தவைவர் சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கி.ரா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை - திமுக சட்டப்பேரவை குழு தலைவர் சிவா!!
இந்நிலையில், புதுச்சேரியில் மரணமடைந்த எழுத்தாளர் கி. ரா உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புதுச்சேரி திமுக சட்டப்பேரவை குழு தவைவர் சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி: இருதினங்களில் தொடங்கும்!
Last Updated : May 18, 2021, 11:50 AM IST