தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சி” - காங்கிரசுக்கு செக் வைக்கிறதா திமுக?

புதுச்சேரி: தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சியே மலரும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா கூறியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"DMK-led rule in Puducherry too" - Is DMK keeping a check on Congress?
“புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சி” - காங்கிரசுக்கு செக் வைக்கிறதா திமுக?

By

Published : Jan 15, 2021, 9:02 PM IST

புதுச்சேரி தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிவா தலைமையில் திருவள்ளுவர் தினம் இன்று (ஜன.15) கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “புதுச்சேரி மேலிட பார்வையாளராக முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி.,யை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். வரும் 18ஆம் தேதி காலாப்பட்டில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளோம் . அக்கூட்டத்தில் குறைந்தது 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையில்தான் கூட்டணி அமையவுள்ளது. அந்த கூட்டணியில் திமுகதான் தலைமை வகிக்கும். புதுச்சேரியில் நாம் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெரும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் நம்மிடம் உள்ளனர்.

புதுச்சேரி தெற்கு மாநில திமுக தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டபோது

புதுச்சேரி யூனியன் பிரதேச திமுகவின் நிலை குறித்து கட்சித் தலைவர் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள பல்வேறு கட்சியினர் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் 100% திமுக தலைமையிலான ஆட்சியே மலரும்” என்றார்.

தொடர்ந்து திமுக, காங்கிரஸ் கட்சியினரிடையே நிகழ்ந்துவரும் இந்த வார்த்தைப் போர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் தாக்கம் செலுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பதவி விலகக் கோரிக்கை விடுத்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணா சதுக்கம் அருகே நடைபெற்ற 4 நாள் தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தை, திமுக புறக்கணித்திருந்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :பழைய இரும்பு விற்பனை கடையில் தீ விபத்து - ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details