தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

DK Shivakumar : சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? - டி.கே.சிவகுமார் பளீச்!

சித்தராமையாவுடன் தனக்கு எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்து உள்ளார்.

DK Shivakumar
DK Shivakumar

By

Published : May 14, 2023, 11:04 PM IST

தும்குர் : கர்நாடக அரசியலில் அடுத்த முதலைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுடனான தனது உறவு குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் தெரிவித்து உள்ளார்.

தும்குரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியதாவது, "சித்தராமையாவுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. கட்சிக்காக பலமுறை தியாகம் செய்துள்ளேன்.

நான் தியாகம் செய்தும் உதவி செய்தும் சித்தராமையாவுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்காக நின்றேன். தொடக்கத்தில் என்னை அமைச்சராக்காதபோது பொறுமையாக இருந்தேன். நான் சித்தராமையாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து உள்ளேன்" என்று அவர் கூறினார்.

அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வரும் நிலையில் அதுகுறித்து சிவகுமார் விளக்கம் அளித்தார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் மாநில மற்றும் தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து முடிவு எட்டப்படாத நிலையில், கட்சி மேலிடத்திடம் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் முடிவை ஒப்படைக்கும் விதமாக ஒற்றை வரி தீர்மானத்தை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கொண்டு வந்தார்.

அதை டி.கே. சிவகுமார் ஆதரித்த நிலையில், முதலமைச்சர் பொறுப்பை காங்கிரஸ் கட்சி மேலிடத்திடம் வழங்குவது குறித்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால், அடுத்த சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் முடிவு கட்சி மேலிடத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தனியார் விடுதியின் வெளியே சித்தராமையா - டி.கே சிவகுமார் ஆதரவாளர்கள் மாற்றி மாற்றி கோஷ்ம் எழுப்பினர். இதனால் அப்பகுதியே கலவர பூமி போல் காட்சி அளித்தது.

முன்னதாக முதல் இரண்டு ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக பதவி வகிப்பார் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதலமைச்சர் பதவி வகிக்கிலாம் என்றும் கூறப்பட்டது. 2028ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை டி.கே. சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள இந்த முடிவு எடுக்கபட்டதாக பல்வேறு வியூகங்கள் வேகமாக பரவின.

அதேநேரம் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி டி.கே. சிவகுமார் சிறை சென்று பின் ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவரை முதலமைச்சராக அறிவித்தால் மீண்டும் வழக்குகளை தூசி தட்டி மத்திய அரசு விசாரணையை துரிதப்படுத்தும் எனக் கூறப்படுவதால் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதில் பின்தங்கிய நிலை ஏறப்ட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் டி.கே. சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவிடமே ஒப்படைக்க காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க :Bihar : பஞ்சாயத்து தலைவரின் கணவர் நடுரோட்டில் சுட்டுக் கொலை! அரசியல் போட்டியா?

ABOUT THE AUTHOR

...view details