தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்... 4 நாட்களில் அடுத்தடுத்த திருப்பம்.. - Congress appoint Siddaramaiah as a Karnataka Cm

கர்நாடகாவில் முதலமைச்சர் தேர்வு தொடங்கி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது வரை காங்கிரஸ் கட்சியின் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

Karnataka
Karnataka

By

Published : May 18, 2023, 6:07 PM IST

Updated : May 18, 2023, 6:16 PM IST

டெல்லி : கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக முதலமைச்சர் தேர்வில் காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வந்து உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டி.கே.சிவகுமாருக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் பதவிக்கு டி.கே. சிவகுமார் எப்படி ஒத்துக் கொண்டார் என்ற கேள்வியும் மாநிலத்தில் சுழன்றடித்துக் கொண்டு இருக்கின்றன.

கட்சி மீது இருக்கும் விருப்பத்தின் காரணமாக முதலமைச்சர் பதவியை தியாகம் செய்து, துணை முதலமைச்சராக பதவி வகிக்க டி.கே.சிவகுமார் ஒப்புக்கொண்டதாகவும் ஒருபுறம் புயல் வீசி வருகிறது. நான்கு நாட்களாக காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலியாக இருந்த பிரச்சினை தற்போது தீர்ந்து உள்ளது.

அதேநேரம், கர்நாடக அரசியலில் இன்னொரு ஏக்நாத் சிண்டேவாக, டி.கே.சிவகுமார் உருவாகிவிடுவாரோ என்ற அச்சமும் நிலவுவதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த நகர்வுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...

  1. தென் இந்தியாவின் திறவுகோளாக காணப்பட்ட கர்நாடகாவை அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் பாஜக அல்லாத தென் இந்தியா உருவாக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பை சித்தராமையாவிடம், கட்சிப் பொறுப்பையும் டி.கே சிவகுமாரிடமும் கட்சி வழங்கி உள்ளது.
  2. முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை முதலமைச்சர் பதவிக்கு டி.கே.சிவகுமார் ஒப்புக்கொண்டு உள்ளார். டி.கே.சிவகுமாரின் சீரிய உழைப்பைக் கண்டு மெய்சிலிர்த்த காங்கிரஸ் கட்சி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சிவகுமார் தலைமையில் எதிர்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
  3. கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் சனிக்கிழமை நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது. இந்த விழாவில் காந்தி குடும்பத்தினர், காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்ற மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  4. முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், கட்சியின் மீது உள்ள விருப்பத்தின் காரணமாக தனது லட்சியத்தை தியாகம் செய்ய முன்வந்து உள்ளதாக தெரிவித்தார்.
  5. முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டிற்கு சென்ற சித்தராமையா, டி.கே. சிவகுமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டு உள்ளது.
  6. முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "கர்நாடக மக்களின் முன்னேற்றம், நலன் மற்றும் சமூக நீதியை காக்க காங்கிரஸ் அணி உறுதி கொண்டு உள்ளதாகவும், 6 கோடியே 50 லட்சம் கன்னடர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க :26/11 மும்பைத் தாக்குதல் : தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல்!

Last Updated : May 18, 2023, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details