டெல்லி: தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இதுஷார் மேத்தா, மனுதாரரின் கோரிக்கையை வரவேற்பதாக தெரிவித்தார்.
இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் பொதுமக்களிடம் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதுபோன்ற இலவசங்கள் தொடர்ந்து வந்தால், அது எதிர்காலத்தில் பொருளாதார அழிவிற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். இந்த இலவசங்கள் மக்களின் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.