டெல்லி:பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புதிய செயலாளர் மற்றும் தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிகளை சதீஷ் ரெட்டி வகித்து வந்த நிலையில், அவர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக பணியிடம் மாற்றப்பட்டார். இதன் காரணமாக டிஆர்டிஓவின் புதிய தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டார்.
டிஆர்டிஓவின் புதிய தலைவராக சமீர் வி காமத் நியமனம் - scientist Samir V Kamat
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக சமீர் வி காமத் நியமனம் செய்யப்பட்டார்.
![டிஆர்டிஓவின் புதிய தலைவராக சமீர் வி காமத் நியமனம் Distinguished scientist Samir V Kamat appointed DRDO chief](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16195907-thumbnail-3x2-l.jpg)
சமீர் வி காமத், டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர். ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படிப்பில் பிடெக் முடித்தவர். அதன் பின் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை கழகத்தில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். 1989ஆம் ஆண்டு டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். அதன்பின் ஆய்வக இயக்குநர், நாவல் சிஸ்டம்ஸ் மற்றும் மெட்டீரியல்சின் இயக்குநர் என்று பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் தலைவராகியுள்ளார்.
இதையும் படிங்க:பெண் குழந்தையைக் காப்போம் என்பவர்களே, பாலியல் வன்புணர்வாளர்களை காப்பாற்றுகிறார்கள்... ராகுல் காந்தி...