பிகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் விஜயகுமார் (35). இவர் சொந்தமாக கிளினிக் நடத்திவந்தார். இவரை நேற்று (டிச. 07) மாலை 6.30 மணியளவில் சன்னிகுமார் (27) என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார்.
அப்போது, அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினர் அந்த இளைஞரிடமிருந்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அந்த இளைஞரை அப்பகுதியினர் மடக்கிப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து சன்னிகுமாரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.