ஹைதராபாத்: டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கு, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா வந்திருந்தார். அப்போது, அவர் ஒரு முன்னணி இணையதள செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது, தங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய திரைப்படத்தை கூறுமாறு நெறியாளர் கேள்வி கேட்டார்.
உடனே லூலூ, தனக்கு ஆர்ஆர்ஆர் (RRR) திரைப்படம் பிடிக்கும் என பதில் அளித்தார். மேலும், “மூன்று மணிநேரம் இருக்கக் கூடிய இந்த படத்தில் அழகான நடனம், நகைச்சுவை, பாடல் என அனைத்தும் அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இந்தியா இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். யாரிடம் சென்று RRR படம் குறித்து கேட்டாலும் பிடித்திருக்கிறது என்றும் நடனம், பாடல், நடிப்பு என அனைத்து நன்றாக அமைந்திருப்பதாக தெரிவித்தனர். ஆகையால், எனது மனதை கவர்ந்து இழுத்த இந்த படத்தின் நடிகர்கள், இயக்குநருக்கு எனது வாழ்த்துகள்.