தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

students
students

By

Published : Sep 18, 2021, 4:47 PM IST

டேராடூன்:நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை திறந்துவருகின்றன.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே, " உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் செப்.21ஆம் தேதி முதல் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரலாம். வீட்டிலிருப்பவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சிறார்கள் கவனம் - அக்டோபரில் மூன்றாம் அலை அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details