டெல்லி : ஏர் இந்தியா ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. பெரும் இழப்பை சந்தித்து வந்த பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா' விமானப் போக்குவரத்து நிறுவனத்தை ஏலத்தில் விட ஒன்றிய அரசு முடிவு செய்தது.
இந்த நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஏலம் கேட்டு முன்மொழிவுகளை அனுப்பியிருந்தன. ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களும் அந்த நிறுவனத்தை வாங்க ஏலம் கோரியிருந்தனர்.
இந்த நிறுனத்தை வாங்க டாடா நிறுவனமும் ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. இந்நிலையில் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்பொழுது அந்தப் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் என் டாடா ட்விட்டரில், “இது குறித்து ரத்தன் டாடா ட்விட்டரில், “வரவேற்கிறேன்.. ஏர் இந்தியா..
ஏர் இந்தியா நிறுவன ஏலத்தில் டாடா குழுமம் வென்றிருப்பது மகிழ்ச்சியான செய்தி. ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். இது டாடா குழுமத்திற்கு விமானத் துறையில் மிகவும் வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும்.