இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ' குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றி, பிகார் தேர்தலில் நான்காவது முறையாக நிதிஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார். பிகாரில் வகுக்கப்பட்ட யுக்தியுடன் நிதிஷின் அந்தஸ்தை பாஜக குறைத்துவிட்டது. பாஜக ஒரு கொடியை(ஒட்டுண்ணி தாவரம்) போன்றது.
' பாஜக நிதிஷின் அந்தஸ்தை குறைத்துவிட்டது' திக்விஜய் சிங்!
டெல்லி: நிதிஷின் அந்தஸ்தை பாஜக குறைத்துவிட்டது என்றும், பிகாரை விட்டு வெளியேறி தேசிய கட்சியில் (காங்கிரஸ்) சேருங்கள் என, மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது மற்றொரு மரத்தின் ஆதரவை எடுத்து, மரம் காய்ந்தவுடன் செழித்து வளர்கிறது. பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை விட்டுவிட்டு, தேஜஸ்வியை ஆசீர்வதியுங்கள். ஒட்டுண்ணி தாவரம் போன்ற பாஜகவை, பிகாரில் வளரவிடாதீர்கள். பிகாரை விட்டு வெளியேறி, தேசிய கட்சியில் (காங்கிரஸ்) இணையுங்கள். ஏனெனில் பிகார் தங்களுக்கு சிறியதாகிவிட்டது.
நீங்கள் தேசிய அரசியலில் சேர வேண்டும். அனைத்து சோசலிஸ்டுகளும், மதச்சார்பற்ற சித்தாந்தத்தை நம்ப உதவுங்கள். இவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்" என, திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.