மத்தியப்பிரதேசம்: காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பேச்சை திரித்து, அவரைப்பற்றி அவதூறு பரப்பியதாக, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுதொடர்பாக போபால் காவல்துறை ஆணையருக்கு, திக்விஜய் சிங் எழுதியிருந்த புகார் கடிதத்தில், " கடந்த 2019-ம் ஆண்டு மே 16-ம் தேதி, சிவ்ராஜ் சிங் சவுகான் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் ராகுல்காந்தியின் பேச்சு திரித்துக் காண்பிக்கப்பட்டிருப்பதாகவும், ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் இந்த நடவடிக்கையில் சிவ்ராஜ் சிங் சவுகான் ஈடுபட்டுள்ளார்''என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுக்கும் சிங் காரதாவை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளதாகவும், இதுபோன்ற புனையப்பட்ட தகவல்கள் மூலம் காங்கிரஸ் தலைவர்களின் நற்பெயரை கெடுக்க முயற்சித்ததற்காக, சிவ்ராஜ்சிங் சவுகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், புனையப்படாத உண்மையான வீடியோ ஆதாரத்தை, பென்டிரைவில் பதிவு செய்து இக்கடிதத்துடன் அனுப்பியிருப்பதாகவும்" குறிப்பிட்டிருந்தார்.