தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோலைத் தொடர்ந்து 100 ரூபாயை நெருங்கிய டீசல்! - 5 state petrol price

நாட்டில் ஐந்து மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100-ஐ தாண்டியுள்ள நிலையில், ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூபாய் 100-ஐ எட்டியுள்ளது.

petrol
பெட்ரோல்

By

Published : Jun 8, 2021, 11:07 AM IST

ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்): சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தினாலும், மாநிலத்துக்கு மாநிலம் விலை வேறுபடுகிறது. வாட் வரி, சரக்கு கட்டணத்தைப் பொறுத்து விலை மாறுபாடு இருக்கிறது.

அந்த வகையில் நேற்று(ஜுன்.7), ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்திலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கங்கா நகர் மாவட்டத்தில் டீசல் விலை லிட்டர் ரூ.99.24க்கும், பெட்ரோல் லிட்டர் ரூ. 106.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் பதிவான பெட்ரோல், டீசல் விலை தான் நாட்டிலேயே அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details